Top 5 Benefits of Beetroot
பீட்ரூட்: ரத்த அழுத்தம் முதல் இதய நோய் வரை பல பிரச்சினைகளை சரிசெய்யும் பீட்ரூட்டின் டாப் 5 நன்மைகள்
பீட்ரூட், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உடல் செயல்திறனை அதிகரிக்கும், இன்ஃபிளமேஷன்களை குறைக்கும், ஜீரணத்தை மேம்படுத்தும், என பல நன்மைகள் கொண்ட ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பயன்கள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
Top 5 Benefits of Beetroot
1. ஜீரணத்தை மேம்படுத்த
பீட்ரூட்டில் உள்ள உயர் அளவு டயட்டரி பைபர், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினைகளை சரிசெய்யும்.
2. இன்ஃபிளமேஷன்களை குறைக்க
பீட்ரூட்டில் உள்ள பீட்டாலெய்ன்ஸ், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்க உதவுகிறது.
3. உடல் செயல்திறன் அதிகரிக்க
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த சூப்பர் ஃபுட் ஆகும். பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், பயிற்சிக்குத் தேவையான ஸ்டாமினா கிடைக்கும்.
4. இதய ஆரோக்கியத்திற்கு (Benefits of Beetroot)
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரிக் அமிலமாக மாற்றப்பட்டு, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.
5. ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு போன்றவை நிறைந்துள்ளன. இது சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு, உடல்நலனைக் காக்கலாம்.
Keywords: Beetroot benefits, health tips Tamil, Tamil Health Tips
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
சப்ஜா விதைகள்: சத்துக்கள் மற்றும் நன்மைகள்
பாதாம் பிசின்: உடல்நல நன்மைகளின் புதையல்
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!
குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்.!