கல்லாறு வாய்ஸ் (kallaru voice) -ல் வரும் உள்ளூர் செய்திகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
Kallaru voice 29/09/2026

வேலை நிறுத்தம் வாபஸ்
வி.களத்தூரில் தனியார் பேருந்துகள் இயங்கும்
தனியார் பேருந்துகளில் கட்டணமில்லாமல் மக்கள் பயணம் செய்ய அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்ததை அடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதை அடுத்து வி.களத்தூரில் வழக்கம் போல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று அறிவிப்பு.
Kallaru voice 28/09/2026
வி.களத்தூரில் செப்.29,30-ல்
ஆதார் திருத்த முகாம் நடைபெறுகிறது…

வி.களத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது.
பெயர், முகவரி, பிறந்த தேதி, உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Kallaru voice 25/09/2026
