ADVERTISEMENT
Salik Toll

துபாயில் புதிய சாலிக் டோல் கட்டண முறை | Salik Toll

New Salik Toll Payment System in Dubai: Full Details

துபாயின் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாறுபட்ட சாலிக் டோல் கட்டண முறை (Variable Road Toll Pricing) ஜனவரி 2025 இறுதியில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த புதிய கட்டண முறை, வாகன நெரிசலை குறைத்து பயணத்தை மேலும் சீராக்குவது என RTA அறிவித்துள்ளது.


Salik Toll முக்கிய நேரங்களில் கட்டண விபரங்கள்:

  • காலையில் (6:00 AM – 10:00 AM) மற்றும்
    மாலையில் (4:00 PM – 8:00 PM)
    கட்டணம்: 6 திர்ஹம்ஸ்
  • வாகன நெரிசல் குறைவான நேரங்களில்:
    காலை 10:00 AM – மாலை 4:00 PM மற்றும்
    இரவு 8:00 PM – நள்ளிரவு 1:00 AM
    கட்டணம்: 4 திர்ஹம்ஸ்
New Salik Toll Payment System

விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்:

  • சாதாரண ஞாயிற்றுக்கிழமைகளில்:
    நாள் முழுவதும் 4 திர்ஹம்ஸ்
  • அதிகாலை (1:00 AM – 6:00 AM):
    இலவசம்

சாலிக் டோல் கேட் அமைந்துள்ள முக்கிய இடங்கள்:

  • ஷேக் சையத் சாலை: அதிகாலை 1 மணி முதல் 6 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம்.

பயண திட்டமிடலுக்கு உதவிகரமான தகவல்:

  • பீக் ஹவரில் கட்டண உயர்வை கருத்தில் கொண்டு, உங்கள் பயண நேரங்களை திட்டமிடுவது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்.
  • புதிய கட்டண விதிமுறைகள் RTAயின் இணையதளம் மற்றும் சாலிக் பயன்பாட்டில் விரைவில் வெளியிடப்படும்.

இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றம், துபாயின் நகர போக்குவரத்தை சீராக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான மேலும் விபரங்களை கல்லாறு.காம் தொடர்ந்து காணுங்கள்.

New Salik Toll Payment System in Dubai: Full Details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *