Eid al-Fitr holiday announced for Dubai government employees
துபாய் அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறை அறிவிப்பு
துபாய் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறை ஷவ்வால் 1 முதல் ஷவ்வால் 3, ஹிஜ்ரி 1446 வரை வழங்கப்படும். இந்த விடுமுறைக்குப் பிறகு ஷவ்வால் 4 அன்று பணிகள் மீண்டும் தொடங்கும் என துபாய் அரசாங்க மனிதவளத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஷார்ஜா அரசு தனது ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்திருந்தது. பிறையின் அடிப்படையில், மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஈத் பிறந்தால், ஏப்ரல் 1 (செவ்வாய்) வரை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை எனவும், மார்ச் 31 (திங்கட்கிழமை) ஈத் பிறந்தால், ஏப்ரல் 2 (புதன்) வரை நீண்ட விடுமுறை கிடைக்கும்.
அரபு நாடுகளில் ஈத் விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி ஆணையம் நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஈத் விடுமுறையை அறிவித்துள்ளது. புனித ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், ஷவ்வால் 1 அன்று ஈத் அல் பித்ர் உறுதியாகும்.
📢 இது போன்ற அமீரக செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்
Also Read:
ரமலான் இறுதி 10 நாட்கள்: முறையற்ற வாகன நிறுத்தத்திற்கு அபராதம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: பவர் பேங்க் சார்ஜ் புதிய விதிகள்!
அரபு நாடுகளில் ஈத் விடுமுறை அறிவிப்பு
ரமலானில் 33 பேர் பிச்சைக்காரர்கள் கைது