ADVERTISEMENT
மாப்பிள்ளை சம்பா அரிசி

Mappillai Samba-மாப்பிள்ளை சம்பா அரிசியின் மகத்துவம் தெரியுமா?

Do you know the greatness of Mappillai Samba Rice?

இதன் பெயரிலேயே மாப்பிள்ளை இருப்பதைக் கொண்டு நாம் இந்த மாப்பிள்ளை சம்பா வின் மகத்துவத்தை அறியலாம். இந்த பதிவில் இந்த அரிசியின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வோமா?

மாப்பிள்ளை சம்பா பெயர் காரணம்

பெரியதாக இதற்கு காரணம் தேட வேண்டிய அவசியமே இல்லை. இதன் பெயரே அதனைக் காட்டிவிடுகிறது. ஆம் இந்த அரிசியிலுள்ள சத்துக்கள் தரமானது என்றால் தவறு, மிகவும் தரமானது என்றால் சரியாக இருக்கும்.

“மாப்பிள்ளை சம்பா” என்று இந்த அரிசியை அழைத்தாலும் நல்ல வலிமையையும், ஆற்றலையும் பெற விரும்பும் அனைவருக்கும் இது அதிக பயனுள்ளது. ஆண்களுக்கு வலுவை மட்டுமல்ல ஆண்மையையும் பலப்படுத்தும் தன்மையுடையது.

மாப்பிள்ளை சம்பாவில் என்ன இருக்கிறது?

சிவந்த நிறம் கொண்ட இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் போன்றவை நிறைந்து இருக்கிறது.

ADVERTISEMENT

மாப்பிள்ளை சம்பா பயன்கள்:

நீரிழிவுக்கு நல்லது:

கார்போஹைட்ரேட் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்தானது இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதை தாமதமாக்குகிறது. இக்காரணத்தினால் சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.

அடிக்கடி இதை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் டைப்2 டயாபடிஸ் அபாயத்தை கட்டுப்படுத்த செய்யும் என்று தெரிகிறது.

உடல் எடையை குறைக்க:​

இதில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரி குறைவாகவும் இருக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க இந்த அரிசி சிறந்த உணவாக இருக்கும். மேலும் இடையில் பசி உணர்வு எடுக்காது. தரமான செரிமானத்துக்கு உதவுகின்றது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது​:​

பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கின்றன. இந்த சம்பா அரிசியினை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க செய்கின்றன. அதாவது இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

கொழுப்பை குறைக்கும்​​:

இதிலுள்ள புரோ ஆந்தோசயனின்கள் கொழுப்பு மற்றும் ஹைப்பர் கிளைசீமியாவை குறைக்க செய்கிறது. இந்த அரிசியில் மெக்னீசியத்தின் அளவு நிறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

ADVERTISEMENT

நோய் எதிர்ப்பு சக்தி​​​:​

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. சம்பா அரிசியை உணவாக எடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

இதிலிருக்கும் துத்தநாகம் காயங்களை விரைவில் குணப்படுத்த செய்கிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்கிறது.

மாப்பிள்ளை சம்பா வயதான தோற்றத்தை போக்கும்​:​

இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நமது உடலில் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாக்குகிறது. இதனால் நம் உடல் வயதான தோற்றத்திற்கு எடுத்து செல்லாமல் தடுக்கப்படுகிறது. இளவயதில் வயதான தோற்றம் பெறும் அபாயத்தை பலரும் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து இந்த சம்பா அரிசியை உணவாக எடுத்து கொள்வது நல்ல தீர்வாக இருக்கும்.

Mappillai Samba எங்கே வாங்கலாம்​:​

தற்போது தமிழகத்தின் முக்கியமான பல சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் எளிதாக கிடைக்கிறது. அதோடல்லாமல் இந்தியாவில் Amazon போன்ற ஆன்லைன் மார்க்கட்டுகளிலும் கிடைக்கிறது.

அமீரகத்தில் தேவையுடையோர்கள் +91 9751101122 எண்ணில் வாட்ஸ்அப் செய்யவும்.

ADVERTISEMENT

Our Facebook Page

இதையும் படிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி உகந்ததா?

உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தூக்கம் தேவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *