Khutbah in Sharjah Mosque in 40 languages!
ஷார்ஜா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரசங்கம் செயலி மூலம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
அமீரகத்தில் முதன்முறையாக, ஷார்ஜாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றில் வெள்ளிக்கிழமை குத்பா (பிரசங்கம்) 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஷார்ஜா அல் சீஃப் பகுதியில் உள்ள அல் மக்ஃபிரா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் “மின்பார்” என்ற செயலியின் (app) மூலம் கேட்கலாம்.
ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரத் துறையால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, வெள்ளிக்கிழமை பிரசங்கங்களின் செய்தியின் நோக்கத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக அரபு மொழி அல்லாதவர்களும் குத்பாவை புரிந்து கொள்ள ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளேயில் இலவசமாகக் கிடைக்கும். “மின்பார்” செயலியில் ஆங்கிலம், பிரஞ்சு, உருது, பாஷ்து மற்றும் பிற மொழிகள் உட்பட 40 மொழிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்து கொள்ள செய்ய முடியும். மேலும் பிரசங்கத்தின் போது அல்லது அதற்குப் பிறகு உரை அல்லது ஆடியோ மொழிபெயர்ப்பையும் வழங்குகிறது.
குத்பா பிரசங்கங்களை பதிவிறக்கம் செய்தும் சேமிக்கலாம்.
“சமூக தொடர்புகளை மேம்படுத்துவதிலும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாமிய விழுமியங்களை ஒருங்கிணைப்பதிலும் ஒரு தரமான மாற்றத்தை” பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று இஸ்லாமிய விவகாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த முயற்சி “சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் மொழி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் வெள்ளிக்கிழமை பிரசங்கங்களிலிருந்து பயனடையச் செய்வதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டது.
அமீரக செய்திகளை தெரிந்து கொள்ள கல்லாறு.காம் என்ற எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.
Also Read:
18 நாட்களுக்கு ஷார்ஜா ஒளி விழா!
புனிதயாத்திரைக்கு தடுப்பூசி கட்டாயம்
எங்களது சோஷியல் மீடியா பக்கங்கள்
facebook page, Instagram