ADVERTISEMENT
Dubai Metro

துபாய் மெட்ரோ: மஷ்ரெக் நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட்

துபாயின் மஷ்ரெக் மெட்ரோ நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோவாக மாற்றப்படும் என RTA அறிவித்துள்ளது.

Dubai Metro: Mashreq station is now an insurance market

துபாயில் உள்ள மஷ்ரெக் மெட்ரோ நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்படுவதாக எமிரேட்ஸ் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றம் 10 ஆண்டுகளுக்கு இருக்கும். பயணிகள் இந்த மாற்றத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஷேக் ஜாயித் சாலையில் மால்ஃப் தி எமிரேட்ஸ் மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ நிலையங்களுக்கு இடையே உள்ள இந்த முக்கிய நிலையம், ரெட் லைன் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

மெட்ரோ பயணிகள் இது சம்மந்தமான விபரங்களை RTA உதவி மையத்தில் ஏதேனும் உதவி அல்லது விளக்கம் பெறலாம் என்று RTA அறிவித்துள்ளது.

மேலும், இந்த மெட்ரோ நிலையத்தின் வெளிப்புற அடையாளங்கள், மற்றும் சின்னங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மெட்ரோ ரயில்களில் ஒலிப்புற அறிவிப்புகள் மற்றும் பொது போக்குவரத்து நெட்வொர்க்கின் ஸ்மார்ட் மற்றும் எலக்ட்ரானிக் அமைப்புகளும் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பெயர்மாற்றம் InsuranceMarket.ae மற்றும் RTA இடையேயான கூட்டாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. InsuranceMarket.ae நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO, அவினாஷ் பாபர், இந்த பெயரிடும் உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, துபாயின் சின்னமான மெட்ரோ நிலையங்களில் ஒன்றுக்கு தங்கள் நிறுவனத்தின் பெயர் சூட்டப்படுவது மிகப் பெரும் பெருமை என்றும், இந்த மைல்கல் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையுடன் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது துபாயின் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மெட்ரோ நிலையங்களுக்கு இந்த மாதிரி பெயர் சூட்டும் நடவடிக்கைகள், அரசாங்க-தனியார் கூட்டாண்மையின் வெற்றிகரமான முன்மாதிரி என்று RTA ரயில் ஏஜென்சியின் CEO அப்துல் மொஹ்சென் இப்ராஹிம் கல்பட் கூறியுள்ளார்.

மேலும், InsuranceMarket.ae உடன் இணைந்த இந்த ஒத்துழைப்பு, துபாயில் உள்ள நிறுவனங்களுக்கு தங்கள் பிராண்டுகளை சுலபமாக விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது எளிதில் கணக்கில் கொள்ளக்கூடிய வெற்றிகரமான கூட்டாண்மையாக செயல்படும் என்றும், இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பு செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கீகாரம் நிறுவனங்களுக்கு துபாய் மெட்ரோ நிலையங்கள் மூலம் தங்கள் சேவைகள், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை பிரச்சாரம் செய்ய சிறந்த தளத்தை வழங்குகிறது. துபாயின் தொழில்முனைவோர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இங்கு உள்ள பல்வேறு விளம்பர வாய்ப்புகள் கிடைக்கும், இது உலகளாவிய வியாபாரத்தன்மையை மேம்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

மெட்ரோ நிலையங்களுக்கு பெயர் சூட்டும் உரிமை 2009 முதல் நடைமுறையில் உள்ளது. 2023 ஜனவரியில் அல் சஃபா மெட்ரோ நிலையம் ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையமாக மறுபெயரிடப்பட்டது.

ADVERTISEMENT

அதுபோல, 2021ஆம் ஆண்டு துபாய் மெரினா மெட்ரோ நிலையம் சோபா ரியாலிட்டி மெட்ரோ நிலையமாகவும், அல் ஜாஃப்லியா மெட்ரோ நிலையம் மேக்ஸ் ஃபேஷன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Keywords: Dubai Metro, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News


அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்

Our Facebook Page

அமீரக செய்திகள்
துபாயின் போக்குவரத்தை மாற்றும் புதிய சாலிக் கேட்கள்
ஷார்ஜாவில் 600 திர்ஹம் கடனுக்காக கொலை; 7 பேர் கைது
அமீரகம் பொது மன்னிப்பு: சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *