ADVERTISEMENT
Dubai fountain to be closed for 5 months (1)

துபாய் நீரூற்று 5 மாதங்களுக்கு மூடல் | Dubai Fountain close

Dubai fountain to be closed for 5 months

துபாய் நீரூற்று விரிவான புதுப்பிப்பு பணிகள் காரணமாக 5 மாதங்களுக்கு மூடப்படும் என்று எமார் பிராபர்ட்டீஸ் அறிவித்துள்ளது. மேம்பட்ட நடன அமைப்பு, மேலும் சிறப்பான ஒளி மற்றும் ஒலி அமைப்பை வழங்குவதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துபாய் மால் மற்றும் புர்ஜ் கலீஃபா அருகே டவுன்டவுன் துபாயில் அமைந்துள்ள துபாய் நீரூற்று (Dubai fountain), ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இசை, ஒளி, மற்றும் நீர் ஒத்திசைவுடன் நிகழ்த்தப்படும் இந்த காட்சிகள், பார்வையாளர்களை மயமாக்கும் தன்மை கொண்டவை.

மே மாதம் முதல் மேம்படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று எமார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், நீரூற்று இன்னும் கண்கவர் அனுபவத்துடன் திரும்பும் என்றும், இது மிகவும் ஆழமான அனுபவத்தைக் கொண்டுவரும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

“துபாய் நீரூற்று வெறும் காட்சியல்ல, இது துபாயின் ஆன்மாவின் பிரதிபலிப்பாகும். கலை, புதுமை மற்றும் உணர்ச்சிகள் ஒருங்கிணைந்த ஓர் அற்புத அனுபவமாக இது உருவாகும். மக்களை இணைக்கும், அதிசயத்தைக் கிளப்பும், காலத்தினைத் தாண்டும் ஒரு அழகிய தருணத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என எமார் நிறுவனர் முகமது அலப்பார் தெரிவித்தார்.

ADVERTISEMENT

துபாய் நீரூற்று மீண்டும் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள கல்லாறு.காம் இணையதளத்தைக் பார்வையிடுங்கள்!

Also Read:
புனிதயாத்திரைக்கு தடுப்பூசி கட்டாயம்

Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *