54th Eid Al Etihad New Rules
ஐக்கிய அரபு அமீரகத்தின் 54வது ஈத் அல் எதிஹாத்: கொண்டாட்டங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 54வது ஈத் அல் எதிஹாத் (Eid Al Etihad) கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் குடும்பத்துடன் இந்த விடுமுறையை அனுபவிக்கத் தயாராகி வரும் நிலையில், கொண்டாட்டங்கள் பாதுகாப்பாகவும், விபத்தில்லாமலும் இருப்பதை உறுதி செய்ய உள்துறை அமைச்சகம் (MOI) முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொறுப்புடன் கொண்டாடுவோம் சாலை பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படாத வகையில் குடிமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அமீரகக் கொடியை உயர்த்துவது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது போன்ற செயல்கள் மூலம் தேசப்பற்றை வெளிப்படுத்தலாம். இருப்பினும், சில குறிப்பிட்ட செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
54th Eid Al Etihad
தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் எவை?
கீழ்க்கண்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடும் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது:
- அணிவகுப்பு: அனுமதியின்றி சீரற்ற அணிவகுப்புகளில் ஈடுபடுதல்.
- போக்குவரத்து: பொதுச் சாலைகளை மறித்தல் அல்லது போக்குவரத்துக்கு இடையூறு செய்தல்.
- ஸ்டண்ட்: வாகனங்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுதல்.
- ஆபத்தான பயணம்: ஜன்னல்கள் அல்லது சன்ரூஃப் வழியாக வெளியே எட்டிப் பார்ப்பது.
- அதிக சுமை: வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுதல்.
- நம்பர் பிளேட்: வாகனத்தின் எண் பலகையை மறைத்தல்.
- மாற்றங்கள்: அங்கீகரிக்கப்படாத வாகன மாற்றங்கள் அல்லது அதிக சத்தம் எழுப்புதல்.
- உடை/கொடி: தேசிய நிகழ்வுடன் தொடர்பில்லாத ஸ்கார்ஃப்களை அணிதல் அல்லது அமீரகக் கொடியைத் தவிர வேறு கொடிகளை ஏற்றுதல்.
- ஸ்ப்ரே பெயிண்ட்: வாகனங்களில் ஸ்ப்ரே பெயிண்ட் பயன்படுத்துதல்.
- இசை: கொண்டாட்டத்துடன் தொடர்பில்லாத பாடல்களை அதிக சத்தத்துடன் ஒழிபரப்புதல்.
தேசியக் கொடிக்கு மரியாதை
அமீரகக் கொடியை ஏற்றும்போது அதற்கான 15 அதிகாரப்பூர்வ விதிகள்படி, சரியான விகிதாச்சாரத்துடனும், தூய்மையாகவும், மரியாதைக்குரிய வகையிலும் கையாளப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்தத் தேசிய தினத்தை ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்!