ADVERTISEMENT
Smart speed control devices in taxis!

டாக்ஸிகளில் ஸ்மார்ட் வேக கட்டுப்பாட்டு கருவிகள்!

Smart speed control devices in taxis!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானில் டாக்ஸிகள் மற்றும் லிமோசின் வாகனங்களில் “ஸ்மார்ட் ஸ்பீட் லிமிட்டர்” (Smart speed control) எனும் புதிய கருவிகள் பொருத்தப்படுகின்றன. இந்த கருவி, வாகனம் செல்லும் இடத்தை கண்காணித்து, அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தானாகவே அமைத்து, வாகனத்தை அதற்கு ஏற்ப இயக்குகிறது.

இந்த தொழில்நுட்பம் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக அஜ்மானில் அறிமுகமாகிறது. இது மற்ற அமீரகத்தில் உள்ள கருவிகளை விட மேம்பட்டது. இதன் முக்கிய நோக்கம், வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுத்து, ஆபத்தான விபத்துகளை குறைப்பது.

இந்த கருவியின் (Smart speed control) சிறப்பம்சங்கள்:

  • வாகனம் செல்லும் பகுதியின் வேக வரம்பை துல்லியமாக கண்டறியும்.
  • வாகனத்தின் இயக்க அமைப்புடன் இணைந்து வேகத்தை தானாக கட்டுப்படுத்தும்.
  • புதிய தரவுகளை தொடர்ந்து புதுப்பித்து, வேக வரம்பை பின்பற்றுவதை உறுதி செய்யும்.
  • ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும்.

இந்த புதிய முயற்சி அஜ்மானில் சாலை பாதுகாப்பை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: Khaleej Times

ADVERTISEMENT

துபாய் மற்றும் பிற அமீரகங்களில் நடைபெறும் முக்கிய செய்திகள், வேலை வாய்ப்பு தகவல்கள், அன்றாட தகவல்கள் போன்றவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது கல்லாறு.காம் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.

Also Read:
அனுமதியின்றி மற்றவர் புகைப்படம் பகிர்ந்தவருக்கு அபராதம்!
துபாயின் புதுமையான ‘நகர ஆய்வாளர்’ திட்டம் தொடக்கம்!
ஃபேஸ்புக் நண்பர் பணம் கேட்டால் எச்சரிக்கை!

Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *