ADVERTISEMENT
Good news for UAE NRIs

UAE-ல் இருந்து தங்கம் கொண்டு போவோருக்கு நிம்மதி: 2026 பட்ஜெட்டின் அதிரடி மாற்றங்கள்!

Good news for UAE NRIs | அமீரகத்தில் இருந்து தங்கம் கொண்டு செல்லும் இந்தியர்களுக்கு 2026 பட்ஜெட்டில் நிம்மதி. எடை அடிப்படையில் வரி விலக்கு. முழு விவரம்.

அபுதாபி, துபாய், ஷார்ஜா என அமீரகத்தின் எந்தப் பகுதியில் நாம் வேலை செய்தாலும், விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது ஒரு சிறு தங்க நகையாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை. ஆனால், ஏர்போர்ட்டில் இறங்கியதும் ‘சுங்க வரி’ (Customs) என்ற பெயரில் நடக்கும் கெடுபிடிகளும், “எவ்வளவு நகை வச்சிருக்கீங்க?” என்ற அதிகாரிகளின் கேள்விகளும் நம்ம ஊர் சாதாரணத் தொழிலாளர்களைக் கூடப் பதற்றமடையச் செய்யும்.

இந்த நீண்ட காலப் பயத்திற்கு 2026-ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள புதிய விதிகள், குறிப்பாக அமீரக வாழ் இந்தியர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆம் அது அமீரக NRI-களுக்கு குட் நியூஸ் (Good news for UAE NRIs) தான் என்பதில் சந்தேகமே இல்லை.

கத்தாரில் வேலை வாய்ப்புகள் 2026: ஒரு புதிய பார்வை!

Good news for UAE NRIs

Good news for UAE NRIs
Good news for UAE NRIs

பழைய சிக்கல் என்ன?

இதுவரை இருந்த விதிகளின்படி, நீங்கள் கொண்டு வரும் தங்கத்தின் எடையை விட அதன் ‘பண மதிப்பு’ (Value) தான் வில்லனாக இருந்தது. உதாரணமாக, ஒரு பெண் 40 கிராம் நகை கொண்டு வரலாம் என்றாலும், அதன் மொத்த மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தங்கம் விலை இப்போது உச்சத்தில் இருப்பதால், வெறும் 15-20 கிராம் நகையே ஒரு லட்சத்தைத் தாண்டிவிடுகிறது. இதனால், அனுமதிக்கப்பட்ட எடைக்கும் குறைவாக நகை வைத்திருந்தாலும், அதன் ‘விலை’ அதிகமாக இருப்பதால் பயணிகள் அபராதம் கட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது.

இனி ‘வெயிட்’ தான் மேட்டர்!

தற்போது இந்திய அரசு இந்த ‘மதிப்பு’ (Price limit) என்ற சிக்கலைத் தூக்கி எறிந்துவிட்டது. இனி தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் கவலையில்லை; எடை (Weight) மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

புதிய அதிரடி விதிமுறைகள்:

  • பெண்கள்: 40 கிராம் வரை தங்க ஆபரணங்களை எவ்வித வரியும் இல்லாமல் ஊருக்குக் கொண்டு போகலாம்.
  • ஆண்கள்: 20 கிராம் வரை தங்க ஆபரணங்களை வரி இல்லாமல் கொண்டு போகலாம்.

முன்பு இருந்த ₹1,00,000 (பெண்கள்) மற்றும் ₹50,000 (ஆண்கள்) என்ற பண வரம்பு இனி கிடையாது என்பதுதான் இதில் ஹைலைட்!

துபாயில் எதெல்லாம் சீப்? ஷாப்பிங் பிரியர்களுக்கான ஒரு ‘ரியலிஸ்டிக்’ கைடு!

ஷார்ஜா இந்திய சங்கத்தின் வெற்றி

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் நம் ஊர் சமூக அமைப்புகளின் உழைப்பு பெரியது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் 2025-இல், ஷார்ஜா இந்திய சங்கம் (Indian Association Sharjah) இந்திய நிதியமைச்சகத்தைச் சந்தித்து முறையிட்டது. “விலைவாசி உயர்வால் சாதாரண பயணிகள் கூட விமான நிலையத்தில் குற்றவாளிகள் போல பார்க்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.

இதன் பலனாகவே அமீரக NRI-களுக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது. ஆம் அதனால் தான் இந்தச் சீர்திருத்தம் கிடைத்துள்ளது. இது குறித்து ஷார்ஜா இந்திய சங்கத் தலைவர் நிசார் தலங்காரா கூறுகையில், “விமான நிலையங்களில் நிலவும் தேவையற்ற குழப்பங்களுக்கும், பயணிகளின் மன உளைச்சலுக்கும் இந்த முடிவு நிரந்தர தீர்வைத் தரும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

UAE-ல் குறைந்த வருமானத்திலும் சேமிக்க உதவும் ‘Digital Banks’: ஒரு முழுமையான வழிகாட்டி

கல்லாறு வாசகர்களுக்கான டிப்ஸ்:

நீங்க அமீரகத்தில் இருந்து ஊருக்குக் கிளம்பும் போது, உங்கள் கையில் அல்லது பெட்டியில் இருக்கும் ஆபரணங்களின் எடை 40 கிராம் (பெண்கள்) அல்லது 20 கிராம் (ஆண்கள்) தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், கோல்ட் ரேட் எவ்வளவு இருந்தாலும் நீங்கள் தைரியமாக வெளியே செல்லலாம். அப்போ இது அமீரக NRI-களுக்கு குட் நியூஸ் தானே.

ADVERTISEMENT

துபாய் மற்றும் பிற அமீரகங்கள் மற்றும் அரபு வளைகுடா நாடுகளின் வேலை வாய்ப்பு தகவல்கள், சட்டங்கள், வங்கிகள், கடன்கள், சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள எங்களது கல்லாறு.காம் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.

Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *