ADVERTISEMENT
eatured image showing a plate of dates with the title 'Benefits of Dates in Tamil' in a modern blue infographic style thumbnail highlighting the health benefits of dates.

பேரீச்சம் பழம் நன்மைகள் & தீமைகள் | உடலுக்கு ஆற்றல் தரும் பழம் (updated)

பேரீச்சம் பழம் உடலுக்கு ஆற்றல் தரும் அற்புதமான ஒரு பழம். The Benefits of dates (பேரீச்சம் பழத்தின் நன்மைகள்) மற்றும் அதன் தீமைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

பேரீச்சம் பழத்தின் வரலாறு

பேரீச்சம் மரம் (Phoenix dactylifera) உலகின் மிக பழமையான பயிர்களில் ஒன்று. மத்திய கிழக்கு பகுதிகளில் கிபி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இதை சாப்பிட்ட வரலாற்று தகவல்கள் உள்ளன. சுமேரியர்களும் எகிப்தியர்களும் பேரீச்ச மரங்களை உணவிற்காகவும் மருத்துவத்திற்காகவும் வளர்த்தார்கள்.

குறிப்பாக மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளில் இது அன்றாட அடிப்படை உணவாகவே இருந்தது. இன்றைக்கும் அமீரகம், சவூதி அரேபியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் தான் இதை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன.

அறிவியல் பெயர் மற்றும் விளையும் இடங்கள்

பேரீச்சம் பழத்தின் அறிவியல் பெயர் Phoenix dactylifera. இது வறட்சியான, அதிக வெப்பம் கொண்ட சூழலில் சிறப்பாக வளரும்.

மத்திய கிழக்கு நாடுகளின் உணவுப் பழக்கத்தில் பேரீச்சம் பழம் எப்போதும் முதன்மையாக இருக்கும். இதன் தனித்துவமான சுவையும் சத்துக்களும் தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பார்க்க வைக்கின்றன. துபாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான தோப்புகளில் பேரீச்ச மரங்களை வளர்க்கிறார்கள்.

ADVERTISEMENT

பேரீச்சம் பழம் நன்மைகள் & தீமைகள் (Benefits of dates)

நன்மைகள்

  • சத்து நிறைந்தது: பேரீச்சம் பழத்தில் வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சத்தையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதை உடலுக்கு ஆற்றல் தரும் இயற்கையான எரிபொருள் என்றே சொல்லலாம்.
  • செரிமானத்தை மேம்படுத்தும்: இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், குடலைச் சுத்தமாக வைத்து செரிமானத்தை சீராக்குகிறது. அத்துடன் வாய்ப்புண், மலச்சிக்கல், குடல் தொடர்பான கோளாறுகள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: பேரீச்சம்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் ஆபத்துகளையும் அதன் அறிகுறிகளையும் குறைக்க முடியும்.
  • எலும்புகளுக்கு வலிமை: இதில் கால்சியமும் பொட்டாசியமும் கணிசமாக இருப்பதால் எலும்புகள் பலம்பெறும். மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
  • உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்: பேரீச்சம் பழம் சாப்பிட்ட உடனேயே உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு கிடைக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், சோர்வாக இருக்கும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது. பாரம்பரியமான மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகளைப் போலவே, பேரீச்சம்பழமும் உடலுக்கு அபரிமிதமான வலிமையைத் தரக்கூடியது.

தீமைகள்

  • சர்க்கரை அளவு அதிகம்: பேரீச்சம்பழத்தில் இயற்கைச் சர்க்கரை அதிகம். இனிப்புச் சுவை தூக்கலாக இருக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் பட்டியலில் இதைச் சேர்க்கும் போது மிகவும் அளவோடு சாப்பிடுவது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
  • கலோரிகள் அதிகம்: 100 கிராம் பேரீச்சம் பழத்தில் 277 கலோரி உள்ளது. அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை கடகடவென ஏற வாய்ப்பிருக்கிறது (அதனால் அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது).
  • ஒவ்வாமை பிரச்சனைகள்: சிலருக்கு பேரீச்சம் பழம் சாப்பிட்டால் தும்மல் அல்லது மூச்சுத்திணறல் அலர்ஜி வரலாம். உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இதைத் தவிர்ப்பது நல்லது.

மருத்துவ குணங்கள்

The Benefits of dates (பேரீச்சம் பழத்தின் நன்மைகள்) பல மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் இதய நோய், டெமென்ஷியா (ஞாபகமறதி) மற்றும் புற்றுநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *