UAE வேலை விசா மோசடி. வேலை தேடுபவர்களைக் குறிவைத்து நடக்கும் விசா மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
UAE Visa Security Tips
அதிகாரப்பூர்வ வேலை கடிதத்தை சரிபார் (MoHRE Offer Letter)
UAE-யில் உங்களுக்கு வேலை கிடைத்தால், அந்த நிறுவனம் MoHRE மூலம் வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரை உங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- அதில் நிறுவன மேலாளரின் கையொப்பம் இருக்க வேண்டும்.
- அதில் உள்ள Reference Number-ஐ வைத்து, MoHRE இணையதளத்தில் அதன் உண்மைத்தன்மையை நீங்கள் ஆன்லைனில் உறுதி செய்யலாம்.
விசிட் விசா – எச்சரிக்கை!
சுற்றுலா அல்லது விசிட் விசா (Visit Visa) உங்களுக்கு வேலை செய்யும் உரிமையை வழங்காது. விசிட் விசாவில் வேலை செய்வது UAE சட்டப்படி குற்றம்; இது அபராதம் மற்றும் நாடு கடத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.
விசா செலவு நிறுவனத்துடையது
UAE தொழிலாளர் சட்டப்படி, ஒரு பணியாளருக்கான விசா மற்றும் ஆட்சேர்ப்பு செலவுகள் (Recruitment Costs) அனைத்தையும் நிறுவனமே (Employer) ஏற்க வேண்டும். உங்களிடம் பணம் கேட்டால் அது மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது.
விசாவை ஆன்லைனில் சரிபார்க்கும் முறைகள்
UAE வேலை விசா மோசடியிலிருந்து சரிபார்க்க உங்களுக்கு வழங்கப்பட்ட நுழைவு அனுமதி (Entry Permit) உண்மையானதா என்பதை கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம்:
| எமிரேட் (Emirate) | சரிபார்க்க வேண்டிய தளம் |
| துபாய் (Dubai) | GDRFA Website |
| அபுதாபி, ஷார்ஜா & பிற | ICP eChannels Platform |
அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப சிறந்த வழிகள் (2026)
நிறுவனத்தின் உண்மைத்தன்மை
வேலை வழங்கும் நிறுவனம் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை National Economic Register இணையதளத்தில் அதன் பெயரைத் தேடி உறுதி செய்து கொள்ளுங்கள்.
ரெசிடென்சி விசா முறை
நீங்கள் UAE-க்கு வெளியே இருக்கும்போதே நேரடியாக ‘ரெசிடென்சி விசா’ கிடைக்காது. முதலில் நிறுவனம் உங்களுக்கு ‘Entry Permit’ வழங்கும். அதன் மூலம் நீங்கள் உள்ளே நுழைந்த பிறகுதான், மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து அது ‘Residency Visa’ ஆக மாற்றப்படும்.
UAE வேலை விசா மோசடி உதவிக்கு யாரைத் தொடர்புகொள்வது?
வேலை தொடர்பான புகார்கள்: MoHRE (009716-802-7666) அல்லது மின்னஞ்சல்: [email protected].
விசா சந்தேகங்கள்: துபாய்க்கு Amer சேவை மற்றும் பிற அமீரகங்களுக்கு ICP நேரலை சாட் வசதியைப் பயன்படுத்தலாம்.
UAE-யில் பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெற எப்போதும் அதிகாரப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். UAE வேலை விசா மோசடியிலிருந்து உங்கள் நண்பர்களை பாதுகாக்க இந்தத் தகவலை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!
தகவல்கள் இந்த 2025 டிசம்பர் மாதம் அமீரகத்தின அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
துபாய் மற்றும் பிற அமீரகங்களின் வேலை வாய்ப்பு தகவல்கள், சட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள எங்களது கல்லாறு.காம் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.
Also Read:
அமீரகத்தில் பிளாஸ்டிக் தடை: ஜனவரி 1 முதல் அதிரடி மாற்றம்!
ஜெபல் ஜெய்ஸ் தற்காலிகமாக மூடல்:
துபாயின் பாரம்பரிய படகு சவாரி பற்றிய முழு விபரங்கள்
Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,