துபாய் குளோபல் வில்லேஜ் கொண்டாட்டங்கள் 2025: அட்டகாசமான வான வேடிக்கை மற்றும் டிரோன் நிகழ்ச்சிகள்!
துபாய் குளோபல் வில்லேஜில் (Global Village, Dubai) வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 10 முதல் 28, 2025 வரை பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பானதாக மாற்ற, குளோபல் வில்லேஜ் நிர்வாகம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 7 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டுள்ளது.
துபாய் குளோபல் வில்லேஜ் கொண்டாட்டங்கள் 2025
முக்கிய அம்சங்கள்:
துபாய் குளோபல் வில்லேஜ் கொண்டாட்டங்கள் 2025 -ல் முக்கிய அம்சமாக கலைநயமிக்க வான வேடிக்கை (Fireworks): வானில் வண்ணமயமான கோடுகள் தீட்டும் கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி!
அற்புதமான டிரோன் நிகழ்ச்சிகள் (Drone Shows): புதுமை நிறைந்த மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்களுக்கு விருந்தளிக்கும் டிரோன் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.
கொண்டாட்டக் காலம்: டிசம்பர் 10 முதல் டிசம்பர் 28, 2025 வரை.
துவக்க நாள் சிறப்பு: டிசம்பர் 10 அன்று மாலை 7 மணிக்கு வான வேடிக்கை மற்றும் டிரோன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கவும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் உற்சாகத்தை அனுபவிக்கவும் துபாயில் உள்ள குளோபல் வில்லேஜ் சிறந்த இடமாக இருக்கும். இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண தவறாமல் குளோபல் வில்லேஜுக்கு வாருங்கள்!
துபாய் மற்றும் பிற அமீரகங்களில் நடைபெறும் முக்கிய செய்திகள், வேலை வாய்ப்பு தகவல்கள், அன்றாட புதுப்பிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள எங்களது கல்லாறு.காம் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.
Also Read:
துபாய் மாலில் அப்படி என்ன இருக்கிறது?
வருட முடிவில் பரபரப்பாகும் துபாய் விமான (DXB) நிலையம்!
ராஸ் அல் கைமாவில் புதிய யெல்லோ ரூட் பேருந்து சேவை!
Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,