மது குடிப்பதை கண்டித்ததால் இளைஞர் தற்கொலை. Youth commits suicide.
பெரம்பலூர்- துறையூர் மெயின்ரோட்டில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கார்த்தி (வயது 28). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததது. இதனை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்தி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் போலீசார், கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
keywords: Youth commits suicide, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.