Grandmother's body

தாய் இறந்த துக்கம்; விஷம் தின்று வாலிபர் தற்கொலை.

503

தாய் இறந்த துக்கம்; விஷம் தின்று வாலிபர் தற்கொலை. Youth commits suicide by consuming poison.

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் பாண்டியன் (வயது 24). உடல்நலம் சரியில்லாத கலைச்செல்வி கடந்த மார்ச் மாதம் இறந்தார். தாய் இறந்த நாளில் இருந்து பாண்டியன் துயரத்தில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி எலி மருந்தை (விஷம்) தின்று விட்டு பாண்டியன் வீட்டில் மயங்கி கிடந்தார். தஞ்சை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலைச்செல்வி இறந்த துக்கம் தாங்காமல் அவரது அண்ணன் மகன் விக்னேஷ் என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

keywords: Youth commits suicide, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: