முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற பெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
Youth can apply for the Chief Minister’s State Youth Award.
முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, 15 முதல் 35 வயது வரையுள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 15.8.2021-இல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டில் (2020- 21) அதாவது 1.4.2020 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இணையதளம் மூலம் ஜூன் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03516 எனும் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keywords: Youth can apply for Award
You must log in to post a comment.