கஞ்சா விற்ற இளைஞர்

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

282

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது. Youth arrested in Pokcho

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதி (21). இவா் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, பாரதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து அவரை குற்றவியல் நடுவா் மன்றத்தில் காவல்துறையினா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Keywords: youth arrested, Pokcho,
%d bloggers like this: