youngster dead

மின்சாரம் பாய்ந்து இளைஞர் மரணம்.

450

மின்சாரம் பாய்ந்து இளைஞர் மரணம்.

youngster dead in electric

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 21). இவரது தோட்டத்திற்கு அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. அதில் திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை சரி செய்வதற்காக மின் இணைப்பை துண்டிக்காமல், மின்மாற்றியின் மீது நவநீதகிருஷ்ணன் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியின் மீது நவநீதகிருஷ்ணன் மோதியதில், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், நவநீதகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: youngster dead, dead in electric




%d bloggers like this: