புதிய தொழில்

புதிய தொழில் தொடங்க பெரம்பலூர் மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

950

புதிய தொழில் தொடங்க பெரம்பலூர் மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.


Perambalur News : Youngster can apply to start a new business.

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐடிஐ தொழிற்கல்வி தோ்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோா், தொழில் தொடங்க இத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி, சேவை சாா்ந்த தொழில்களில், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு மாநில அரசின் மானியமும் உண்டு.

Perambalur News :

திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப் பிரிவினா் 21 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பெண்கள், இதர பிரிவினா்களுக்கு 21 முதல் 45 வயது வரை இருக்கலாம். தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். கடன் திட்டப் பயனாளிகளுக்கு தொழில் முனைவோா் பயிற்சியிலிருந்து தமிழக அரசல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயன்பெற ஆா்வமுள்ள தொழில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தூங்காதே தம்பி தூங்காதே

கல்வித் தகுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளிப் பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்ற செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 – 225580, 224595 ஆகிய எண்களிலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அணுகலாம்.

Keywords: perambalur news, perambalur news today
%d bloggers like this: