குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை முயற்சி.
Young woman attempted suicide.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக திங்கள்கிழமை குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண் சிகிச்சை பெற்று வருகிறாா்.
ஆலத்தூா் வட்டம், வரகுபாடி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த அன்பழகன் மனைவி பிரியங்கா (25). இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், மூன்றரை வயதில் கிருத்திகா ஸ்ரீ, 6 மாத குழந்தையான திரிஷா ஆகிய குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த பிரியங்கா தனது 6 மாத குழந்தை பிரியங்காவுடன், வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.
இதில் பலத்த காயமடைந்த பிரியங்காவும், குழந்தையும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மருத்துவா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி
Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, Young woman attempted suicide, Suicide attempted
You must log in to post a comment.