பெரம்பலூர் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது. Young man arrested for forcing girl
சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் கஜேந்திரன்(வயது 19). இவர் 18 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கஜேந்திரன் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மறுத்த அந்த சிறுமி, இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் செல்போனில் புகார் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு, சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.
தினத்தந்தி
Young man arrested,
You must log in to post a comment.