கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா?
Business: You can earn up to Rs 2 lakh per month in the village itself.
Village Based Business Ideas in Tamilnadu
பொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில் அமைந்திருக்கும்.
கிராமத்தில் இருப்போரில் வெகு சிலரே, ஏதோ ஒரு அரசாங்க பணியில் சேர்ந்து ஒரு நல்ல சம்பளத்தை பார்ப்பர். ஆனாலும் லட்சத்தில் இருக்காது.
சரி, நேராக நமது தலைப்பிற்கு வருவோம். கிராமத்தில் இருந்து கொண்டே எப்படி மாதம் 2 லட்சம் ஈட்டுவது? தற்போது இருக்கும் காலத்தில் இதற்கு வழி இருக்கிறதா?. இது எப்படி சாத்தியம்? இது முழுக்க முழுக்க உங்கள் திறமை சார்ந்த வேலை. இதற்கு ஒரு வழிகாட்டியாகவே இந்த பதிவு.
எதையும் தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றி ஒரு நாள் வந்தடையும். தவிட்டு வியாபாரம் செய்தாலும் தொடர்ந்து செய்தால், வெற்றி அடையலாம் என்பதெல்லாம் ஆன்றோர்கள் சொன்ன வார்த்தைகள். இது நிச்சயம் பொய்க்காது.
You can earn up to Rs 2 lakh
கிராமத்தில் நிலம் இல்லாதோர் நிலைமை – Village Based Business
கிராமத்திலேயே அநேக தொழில்கள் உள்ளன. ஆனால் அவைகளில் லட்சங்களில் ஈட்டும் அளவுக்கு சம்பாதிக்கும் தொழில் என்றால் உடனடியாக அனைவரும் விவசாயம் என்பார்கள். அதுவும் அதிக நிலப்பரப்பில் வெற்றிகரமாக செய்தால் மட்டுமே அதிக லாபத்தை அடைய முடியும். அதை தவிர வேறெந்த தொழிலும் கிராமத்தில் மிகப்பெரிய அளவில் பெரும் லாபம் எட்ட முடியாது. அதனால் அதிகமான நிலம் இல்லாதவர்கள் மனதளவில் தளர்ந்து நாமெல்லாம் இந்த கிராமத்தை விட்டு வேறெங்காவது சென்றால்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு தள்ளபடுகின்றனர்.
எந்த தொழில் செய்யலாம்
உங்களிடம் நிலம் இல்லை, பெரிய முதலீடு இல்லை என்றாலும் கவலை விடுங்கள். கிராமத்தில் அங்கங்கு என்னென்ன பொருட்கள் கேட்பாரற்று இருக்கும் என ஆராயுங்கள். அவைகளில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றும் பட்டியலிடுங்கள். நான் தேடிய வரைக்கும் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குசிகள், வேப்ப இலைகள் மற்றும் சில இலைகள், ஒரு சில மரக்கட்டை இது போன்ற இன்னும் சில.
இதிலென்ன தொழில் இருக்கிறது என்று என்று கேட்கிறீர்களா?
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பதை மனதில் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.
ஒரு சில பொருட்களில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம். நான் அறிந்த சில வழிமுறைகளை எடுத்துரைக்கிறேன்.
முருங்கை இலை பௌடர் – Village Based Business
முருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம். அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே.
இது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம்.
மாட்டு வரட்டி – Village Based Business
மாட்டு சாணம் கிராமத்தில் எளிதில் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம்.
அட என்னடா இது. இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள்.
“buy cow dung” என்று கூகிள் சித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்யா கூடாது.
இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே.
கரி தூள் – Village Based Business
ஒன்றுக்கும் உதவாததை நாம் குப்பை என நினைத்து எரித்துவிடுவோம். வெந்து தனித்த அந்த சாம்பல் மற்றும் கரியை நாம் சீண்ட கூட மாட்டோம்.
ஒரு சில சமயம் நாம் “காசை ஏன்டா கரி ஆக்குற” என்று திட்டுவதுகூட உண்டு. ஆனால் நாம் அந்த கரியையும் காசாக மாற்றலாம். இதே எப்படி என்று கேட்போருக்கு இதோ அதற்கான பதில்.
கறியை வைத்து நாம் பல் துலக்கலாம், முக பொலிவிற்கு பயன்படுத்தலாம். இதில் “Activated Carbon” உள்ளதால் இதை பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இணையத்தில் இதை தேடினால் இதுவும் விற்பனையில் உள்ளதை காணலாம். இதன் விலையை கண்டால் உங்களுக்கு சிரிப்பு வரும் அளவிற்கு இருக்கும். இதேல்லாம இந்த விலைக்கு விற்கிறார்கள், இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இதை தொழிலாக செய்வோரும் இருக்கும்போது, கிராமத்தில் உள்ளவர்கள் இதை கையில் எடுத்தால் என்ன தவறு.
நீங்கள் கரி தூளை பொட்டலம் போட்டு, அதற்கான விலையை நீங்களே நிர்ணயம் செய்து இணைய சந்தையில் விற்பனை செய்யலாமே.
தேங்காய் சிரட்டை – Village Based Business
தென்னை மரங்கள் அதிகம் உள்ள ஊர்களில், தேங்காய் சிரட்டைகள் எளிதில் கிடைக்கலாம். தேங்காய் சிரட்டைகளை நேரடியாக யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் அதில் உங்களின் கை வண்ணங்களை காண்பித்து ஒரு புதிய உபகரணமாக மாற்றுவதன் மூலம், உள்ளூரிலேயே விற்கலாம். முழுக்கு முழுக்க உங்களின் கற்பனையை தூண்டும் வேலையாகும் இது. அதுவும் பெண்களுக்கு உகந்த வேலையாகும்.
பெண்கள் சுய முன்னேற்ற குழுக்களுக்கு இது போன்றதொரு கலையை கற்றுகொடுத்தாலே போதும், அவர்களுக்கு இது பெரும் லாபத்தை கொடுக்கும்.
“Coconut Shell Products” என்று கூகிள் பண்ணி பாருங்கள். நீங்களே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். தேங்காய் சிரட்டைகளில் எத்துனை எத்துனை பொருட்கள் இருக்கின்றன. தேங்காய் சிரட்டையில் வளையல்கள், குடுவைகள், கரண்டிகள், சிறு பாத்திரம் இன்னும் ஏராளம்.
வேப்பங்குச்சி – Village Based Business
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது போல் வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பற்கள் கற்கள் போல் வலுவாகும். கடினமான அந்த குச்சியை கடித்து, பிழிந்து, மென்று பல் விளக்குவதால் பற்களுக்கு நல்ல பயிற்சியாகி நாளடைவில் வலுவடையும் ஆனால் தற்காலத்தில் அப்படியொரு வலுவான பயிற்சியை யாரும் செய்வதில்லை. மிருதுவாக இருக்கும் பற்பசை மற்றும் தூரிக கொண்டு லேசாக தேய்த்து விடுவதால் பற்கள் தூய்மை அடைய மட்டும் செய்கிறதே தவிர, வலுவடைவதில்லை.
இந்த வேப்பங்குச்சியை விரும்புவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. எளிதாக கிடைக்குமிடத்தில் உள்ள மக்களுக்கு இதன் அருமை தெரிவதில்லை. அதனால் சற்று பருத்த வேப்பங்குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக சரி சமமாக வெட்டி அதனை பாக்கெட் செய்து விற்றால், நல்லதொரு லாபத்தை அடையலாம். கூடவே அதன் மருத்துவ குணத்தை பாக்கெட் மீது ஒரு காகிதத்தில் எழுதியும் விற்பனை செய்யலாம். அதனால் வாங்குவோருக்கு நல்ல விழிப்புணர்வாகவும் அமையும்
சந்தை படுத்துதல் – Business ideas in Tamil
அதெல்லாம் சரி, இனி இந்த பொருட்களை எவ்வாறு சந்தை படுத்தி லாபம் ஈட்டுவது? என்று சிந்திகிறீர்களா? வாழ்த்துக்கள். உங்களின் சிந்தனையை தட்டிவிடுங்கள். இதுவரை சொன்ன எனக்கு, அதற்கான வழிமுறைகளையும் சொல்லாமல் விடுவேனா. கவலை கொள்ள வேண்டாம்.
தற்போதைய காலத்தில் சந்தை படுத்துதல் எளிமையாகிவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு சில சந்தைப்படுத்தும் வழிகள்.
Amazon Selling Program
Flipkart
Facebook Sale
சந்தை படுத்துதலுக்கு முன், உங்களிடம் ஒன்றை கூற விழைகிறேன். உங்களுக்கு நிச்சயம் இன்றைய காலத்தில் இணையத்தை பயன்படுத்தும் அறிவு நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் கூற இருக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் எளிதில் கற்றுக்கொண்டு செய்ய எதுவாக இருக்கும். மேலும் லட்சங்களில் லாபம் எட்டும் உத்தியும் கற்றுகொள்வீர்கள்.
Amazon Selling Program –
Amazon பற்றி நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்கக்கூடும். ஏதேனும் பொருட்கள வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் அந்த பொருட்களை விற்பவர்கள் யார் என்று தெரியுமா? நிச்சயமாக அமேசான் இல்லை. ஆம். சிறு தொழில் செய்வோர்கள், பொருட்களை தயாரிப்போர்கள், வாங்கி விற்கும் தரகர்கள் போன்றோர்களே அந்த பொருட்களை விற்கிறார்கள். அமேசான் அந்த பொருட்களுக்கான சந்தையை மட்டும் உருவாகியிருக்கிறது. மேலும் அந்த பொருட்களை இடம் மாற்றும் வேலையே மட்டும் செய்கிறது. அதுவும் நேரடியாக இல்லாமல், அதற்கும் வேலையாட்கள் இருக்கிறார்கள்.
ஆக, பொருட்களை விற்பவர் ஒருவர், அதை வாங்குபவர் ஒருவர், அதை கொண்டு சேர்பவர் ஒருவர். தற்போது இங்கு உங்களின் நிலை என்ன?
பொருள் விற்பவராக மாறி, உங்களின் படைப்புகளை விற்கவேண்டியதுதானே. அதற்கான விளம்பரம் மற்றும் சந்தையை அமேசானே கவனித்துகொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அமேசானில் விற்பவராக இணைந்து, பொருட்களின் ஆணை வரும்போது அதை பொட்டலம் செய்து அனுப்ப வேண்டியது மட்டும்தான். கொண்டு சேர்பவர் நேரடியாக உங்களிடம் இருந்து அதை பெற்றுக்கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார். பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.
Flipkart
இதுவும் அமேசான் போன்றதே. அமேசான் மூலம் உங்கள் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்யலாம். ஆனால் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் மாட்டுமே விற்பனை செய்யலாம். மாற்றபடி மற்றம் எதுவுமில்லை.
Facebook Sale | Markeplace
Facebook அறியாதோர் தற்போது யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இதில் விற்பனை பொருட்களை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். Facebook சென்றால் Marketplace என்ற Option இருக்கும். இங்கு சென்று உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
மாத வருமானம் எவ்வளவு – Business ideas in Tamil
உங்களின் மாத வருமானம் எவ்வளவு வரலாம் என்பதை ஒரு சிறு கணக்கு மூலம் காண்போம். ஆனால் இது முழுக்க முழுக்க உங்களின் திறமை சார்ந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நீங்கள் உற்பத்தி செய்த ஒரு பொருள்(உதாரணமாக: ஏதேனும் ஒரு இலை பொடி, வற்றல் பொட்டலம்) ஒன்றின் விலை 30 ருபாய் என்று கொள்வோம். உங்களுக்கு தினமும் 250 ஏதேனும் பொட்டலங்கள் Order வருகிறதென்றால், ஒரு நாளைக்கு உங்களுக்கு 7500 ருபாய் வருமானம் வரும். 250 என்பது சற்று பெரிய எண் தான். ஆனால் நீங்கள் தொடங்கிய முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள்.
குறைந்தது இரண்டு லட்சம். (You can earn up to Rs 2 lakh)
காலபோக்கில், உங்களின் தரம் அதை செய்யவேண்டும். தினமும் 7500 என்றால், ஒரு மாதத்திற்கான வருமானம் 2,25000 ருபாய். சந்தைப்படுத்துதலுக்கான தரகு நீக்கினால் நிச்சயம் 2,00,000 மாதம் ஈட்டலாம். உற்பத்தி செலவு என்று பார்க்கும்போது, இது மாதிரியான பொருட்களுக்கு குறைந்த செலவு மட்டுமே ஆகும். ஒரு 50,000 உற்பத்தி செலவு என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் தினமும் 250 பேருக்கு உற்பத்தி செய்ய இவ்வளவாவது ஆகும். இது ஒன்றும் பெரிய விசயமல்லவே.
மேலும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதகரிக்கும் போது உங்களின் வருமானமும் அதற்கேற்ப அதிகரிக்கும். உங்களின் தரத்தை மட்டும் எப்போதும் விட்டுகொடுத்து விடாதீர்கள். அதுவே உங்களின் அடையாளம்.
உங்களின் கிராமத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கி விட்டால், பிறகு நீங்களே ராஜா, நீங்களே மந்திரி. யாரிடமும் உங்களின் வருமானத்திற்காக நிற்க வேண்டாம், வேலை வேண்டி ஓட வேண்டாம். விடுப்பு எடுக்க யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்கு வேண்டாம். மாறாக நீங்கள் ஒரு நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
உங்களின் எதிர்கால தொழிலிற்கான எனது வாழ்த்துக்கள்.
நன்றி : HW2TAMIL
keyword: Village Based Business Ideas in Tamilnadu, Business ideas, Business ideas in tamil, Village based business
You must log in to post a comment.