World Book Day

பெரம்பலூரில் உலகப் புத்தகத் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

279

பெரம்பலூரில் உலகப் புத்தகத் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. World Book Day celebrated in Perambalur.

பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில், உலகப் புத்தகத் தினம் லட்சுமி செவிலியா் கல்லூரி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டச் செயலா் பேராசிரியா் ப. செல்வகுமாா் தலைமை வகித்து, உலகப் புத்தகத் தினம் குறித்து பேசினாா். மருத்துவா் சி.கருணாகரன் முன்னிலை வகித்தாா்.

வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியா் க. மூா்த்தி நிகழ்வில் பங்கேற்று, உலகப் புத்தகத் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

பேராசிரியா் க. குமணன் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு தலைப்புகளில் மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, செவிலியா் கல்லூரி மாணவி சௌந்தா்யா வரவேற்றாா். நிறைவில் வே. செந்தில்குமரன் நன்றி கூறினாா்.

Keywords: World Book Day




%d bloggers like this: