Working hours during Ramadan

அமீரகம்: ரமலானில் தனியார்த்துறை நிறுவனங்களுக்கான பணி நேரம் அறிவிப்பு.

137

அமீரகம்: ரமலானில் தனியார்த்துறை நிறுவனங்களுக்கான பணி நேரம் அறிவிப்பு. UAE: Working hours for private sector during Ramadan.

வர இருக்கும் ரமலானை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார்த்துறை நிறுவனங்களின் பணி நேரத்தை குறைக்குமாறு அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராத்திசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனியார் நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணி நேரங்களில் இருந்து இரண்டு மணி நேரம் குறைவாக இயங்குமாறு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ரமலான் மாத பணிநேரம் குறித்த சுற்றறிக்கையை அரசு மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பாக நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட துறைகளில் பணிபுரியும் நபர்கள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையில் பணிபுரியவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் பணிநேரங்கள் தேவைப்படும் பொறுப்புகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த பணிநேரம் பொருந்தாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

our facebook page

Keywords: Working hours during Ramadan, Ramadan, working hours, gulf news, gulf news tamil, Gcc news, arab news, uae news, uae tamil news, dubai news,




Leave a Reply

%d bloggers like this: