குவைத்: ரமலான் நாட்களில் வேலை நேரம். Working hours during Ramadan.
குவைத்தில் ரமலான் மாதத்திற்கான அரசுத்துறை நிறுவனங்களின் வேலை நேரத்தை சமூக விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குவைத்தில் ரமலான் மாதத்தில் அரசுத்துறை நிறுவனங்களின் அலுவலக வேலை நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையில் இருக்கும். இது சம்பந்தமாக சமூக விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வரும் சூழலில் சுகாதார பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப மேல் குறிப்பிட்ட புதிய கால அட்டவணை ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ரமலான் முடியும் வரையில் அமல்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது போலவே பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் ரமலான் நாட்களின் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைத்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Keywords: Working hours during Ramadan, Ramadan, working timings, Kuwait News, Kuwait tamil news, Kuwait news in tamil
You must log in to post a comment.