Worker killed in accident

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகன விபத்தில் தொழிலாளி பலி.

364

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகன விபத்தில் தொழிலாளி பலி. Worker killed in accident near perambalur.

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிகிச்சை பெற்றுவந்த கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள இந்திரா நகா், தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த அய்யாவு மனைவி சுசீலா (48). கல்லுடைக்கும் கூலித் தொழிலாளியான இவா், கடந்த 13- ஆம் தேதி மாலை தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கோயில் எதிரே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் சுசீலா மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சுசீலா உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

keywords: Worker killed in accident, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: