woman was killed

தந்தை-மகன் சண்டையை விலக்க முயன்ற போது பெண் கத்தியால் குத்தி கொலை.

536

தந்தை-மகன் சண்டையை விலக்க முயன்ற போது பெண் கத்தியால் குத்தி கொலை.

woman was killed while trying to avoid a fight.

தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55). இவரது மனைவி பவானி (45). இவர்கள் அகரம்சீகூர் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் வெங்கடேசன் (28). திருமணமான இவர் மனைவியுடன் கிழக்குத் தெருவில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த ரெங்கசாமி கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வெங்கடேசன் தனது தந்தையிடம் கார் வாங்க பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக, தந்தைக்கும், மகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பவானி, அவர்களுக்கு இடையே புகுந்து சண்டையை விலக்கிக் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இரவு நேரமாக இருந்ததால் அந்த கத்தி யார் கையில் இருந்தது என்று தரியவில்லை. கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த பவானியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: woman was killed, Perambalur District News,




%d bloggers like this: