பெரம்பலூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை.
Woman commits suicide by jumping into well.
பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் சுப்ரமணி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மனைவி செல்வம் (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக செல்வம் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து செல்வத்தின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பெரம்பலூர் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: Woman suicide, Perambalur News
You must log in to post a comment.