Woman killed by snake bite near Perambalur

பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

397

பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

Woman killed by snake bite near Perambalur

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி வசந்தா (வயது 50). காய்கறி வியாபாரியான இவர் மாவட்டத்தில் சந்தை நடைபெறும் இடத்திற்கு காய்கறிகளை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 16-ந்தேதி மாலையில் வசந்தா தனது வீட்டின் திண்ணையில் இருந்த காய்கறி மூட்டையை தூக்க முயன்றபோது, அதில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு வசந்தாவின் காலில் கடித்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வசந்தா கடந்த செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Perambalur district news, Perambalur news live, Perambalur Mavattam, Perambalur Seithigal, Today Perambalur News, Perambalur news today, Perambalur news daily, Woman killed by snake bite, snake bite.




%d bloggers like this: