Woman commits suicide

எலி மருந்தை தின்று பெண் தற்கொலை.

471

எலி மருந்தை தின்று பெண் தற்கொலை. Woman commits suicide by consuming poison.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி கனகம் (வயது 48).

குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த கனகம், சம்பவத்தன்று எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

keywords: Woman commits suicide, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: