உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது.
Woman arrested for smuggling gold
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்திறங்கிய பெண் பயணி ஒருவர் உள்ளாடையில் தங்கம் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் பயணம் செய்தார். இவருக்கு வயது 28.
சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப்பெண்ணிடம் விசாரித்த போது தன்னிடம் சுங்கவரி செலுத்தவேண்டிய பொருட்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இருந்து ஸ்கேனிங் சோதனையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது உள்ளாடைக்குள் சுமார் 1.25 கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருப்பது கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூபாய் 65லட்சம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து இளம்பெண் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Keywords: Woman arrested, smuggling gold
English:
Woman arrested for smuggling gold
A female passenger who arrived in Chennai from Dubai via Emirates Airlines has been arrested for smuggling gold in her underwear. A woman from Kerala was traveling on a special Emirates Airlines flight from Dubai to Chennai. He is 28 years old.
When customs officials questioned the woman, she said she had no goods to pay customs duty. The officers underwent a thorough examination of the suspects during the scanning test from. They then found more than 1.25 kilograms of gold in his underwear. Its value is Rs 65 lakh.
Following this, the girl was arrested and a case has been registered against her, according to the police.
Like this:
Like Loading...
Related