Water flowing in Kallaru

வ.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் நிறைந்து செல்கிறது.

646

வ.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் நிறைந்து செல்கிறது.

Water flowing in Kallaru.

கடந்த சில தினங்களாகப் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாற்றில் இரவு முதல் தண்ணீர் வரத்து இருந்தாலும் காலையில் ஆறு முழுக்க தண்ணீர் நிறைந்து செல்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகு கல்லாற்றில் கரையின் இருபுறமும் தொட்டுச் செல்லும் தண்ணீரைப் பொதுமக்கள் கல்லாற்றின் பாலத்தில் நின்று பார்த்து வருகின்றனர். குழந்தைகளை ஆற்றின் பக்கம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kallaru002

சென்ற வருடத்தில் டிசம்பர் மாதத்தில் இது போல ஆற்றில் தண்ணீர் சென்றது அதற்குப் பிறகு தற்போதுதான் ஆற்றின் இரண்டு கரையைத் தொட்டு தண்ணீர் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Water flowing in Kallaru, Perambalur News




%d bloggers like this: