set up a seed farm

விதைப்பண்ணை அமைக்க ஆசையைா? set up a seed farm

542

விதைப்பண்ணை அமைக்க ஆசையைா?


Agri: Want to set up a seed farm?


விதைப்பண்ணை:

set up a seed farmஇராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க இருப்பதால், விதைப்பண்ணை (Seed Farm)அமைத்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றிக்கொள்ளலாம்.

Want to set up a seed farm?

  • கோ 51, ஏடிடீ 45. போன்ற குறுகிய கால விதை இரகங்கள் மற்றும் டிகேஎம் 13. என் எல் 34440, ஜேஜிஎல் 1798 போன்ற மத்திய கால விதை ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
  • விதைகளை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்குவது மிக மிக முக்கியம்.
  • விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப்பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும்.
  • விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணமாகரூ.25/-ம் வயலாய்வு கட்டணமாக ரூ.60/-ம் விதை பரிசோதனைக் கட்டணமாக ரூ.30/-ம் செலுத்த வேண்டும்.
  • விதைத்த 35ம் நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • விதைப் பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்கள் அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்புநாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.
    பதிவுசெய்தவிதைப்பண்ணைகள் விதைச் சான்று அலுவலர்களால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிப்படுவதால், விதை உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணைகளில் இருந்து கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த அரிய வாய்பைப் பயன்படுத்தி நெல் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

இது தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய இரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

தகவல்
சீ.சக்திகணேஷ்
உதவி இயக்குநர்
இராமநாதபுரம்

சிறுதொழில் பற்றி சந்தேகங்களுக்கு




%d bloggers like this: