இருசக்கர வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம். Voter Awareness parade
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆலத்தூர் வட்டாரத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிலம்பரசன் ஊர்வலத்தை வழிநடத்தினார். இதற்கிடையில் செட்டிகுளம், கொளக்காநத்தம், கூத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
keywords: Voter Awareness parade, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.