Visit Visa Holders Urged to Book Return Ticket with Same Airline.
விசிட் விசாவில் அமீரகம் வருபவர்கள் அதே ஏர்லைனில் ரிட்டர்ன் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருபவர்கள் அதே விமான நிறுனத்தில் தங்கள் ரிட்டர்ன் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு பயண முகவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆலோசனையானது விமான நிறுவன புதிய அறிவுரைகளில் உட்பட்டதாகும்.
சித்திக் டிராவல்ஸின் இயக்குனர் தாஹா சித்திக், வெவ்வேறு விமான நிறுவனங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுகள் எடுப்பதால் பயணிகள் தங்கள் விமானங்களில் ஏற முடியாமல் போன நிகழ்வுகளை தெரிவித்தார். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் வருவதற்கும் திரும்ப செல்வதற்கும் ஒரே விமான நிறுவனத்தில் டிக்கட் எடுக்க வேண்டும் என சித்திக் அறிவுறுத்துகிறார்.
இதேபோல், அல்ஹிந்த் பிசினஸ் சென்டரைச் சேர்ந்த நௌஷாத் ஹசன், குறிப்பிட்ட சில விமான நிறுவனங்கள் முன்பதிவுகளை கட்டாயமாக்குகின்றன என்பதை தெரிவித்தார்.
தற்போது கடுமையான போர்டிங் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3,000 திர்ஹம்களுக்கு சமமான நிதியை எடுத்துச் செல்வது மற்றும் அமீரகத்தில் தங்குமிடத்திற்கான சான்று மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ரிடர்ன் டிக்கெட் போன்ற பயண நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக பயணிகள் இந்தியாவுக்குத் திரும்பிய சம்பவங்கள் நடந்துள்ளதை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
புளூட்டோ டிராவல்ஸைச் சேர்ந்த பரத் ஐதாசனி, அமீரகத்தில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், விமான நிறுவனங்கள் நிதிச் சுமையைச் சுமக்க நேரிடும் என்று விளக்கினார். இதனால் புறப்படும் விமான நிலையங்களில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கோடைகால பயண சீசனில் அதிகமாக இருக்கிறது. சிக்கல்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் பயணிகளிடம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இன்டர்நேஷனல் டிராவல் சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மீர் வசீம் ராஜா போன்றோர் அறிவுறுத்துகின்றனர். அதே போல ரூஹ் டூரிஸத்தைச் சேர்ந்த லிபின் வர்கீசும் இதையே கூறுகிறார். போதுமான நிதி அல்லது தங்குமிட ஆதாரம் இல்லாததால் பயணிகள் நிறுத்தப்படுவதைக் குறிப்பிட்டு இதை தெரிவித்துள்ளார்.
ஒரு சுமுகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும், விசிட் விசா நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு பயணிகள் அதே விமான நிறுவனத்தில் தங்களின் ரிட்டர்ன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
ALSO READ:
What is Yoga? Learn the Essentials Now
Transform Your Life: Surprising Exercise Benefits
Mental Health Tips for Work: Boost Productivity Today!