Visa amnesty: Philippine embassy warns of fake sites
செப்டம்பர் 1ல் தொடங்கவிருக்கும் விசா பொதுமன்னிப்பு திட்டம் குறித்து போலி தளங்களை பிலிப்பைன்ஸ் தூதரகம் எச்சரிக்கிறது.
செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ள விசா பொதுமன்னிப்பு திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் போலி இணையதளங்களைப் பற்றிய எச்சரிக்கையை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் தனது நாட்டவர்களுக்கு விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளதாவது “விசா பொதுமன்னிப்பு பதிவு தளங்களாகக் காட்டி, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களில் இணையதள இணைப்புகளை அனுப்பியுள்ளதாக அதிகமான தகவல்கள் கிடைத்துள்ளன.”
“மேலும் இது சம்பந்தமாக, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்படாத இணையதளங்களில் முக்கியமான அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது” என அறிவுறுத்தியுள்ளது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட இணைய தளங்களில் மட்டுமே பகிரவும்.”
இரண்டு மாத விசா பொதுமன்னிப்பு திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை UAE அரசு இன்னும் வெளியிடவில்லை. மேலும் தெரிவித்துள்ளதாவது, “தூதரகம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகள் விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.”
Kewords: Visa amnesty, UAE Visa, Gulf Tamil News, GCC Tamil News, Tamil news UAE
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
அமீரக செய்திகள்
துபாயில் RTA 1.1 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதிய பேருந்துகள்