Demonstration

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் வேப்பந்தட்டையில் ஆர்ப்பாட்டம்

370

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் வேப்பந்தட்டையில் ஆர்ப்பாட்டம். Village Assistants Association Demonstration.

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் பிச்சை தலைமை வகித்தார். கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 10 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு என்பதை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றம் செய்ய வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு 50 சதவீதம் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை தாலுகா பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அழகுதுரை நன்றி கூறினார்.

keywords: Demonstration, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: