Modernized Emergency Unit

பள்ளி வாகனங்களை இதர பயன்பாடுகளுக்கு இயக்கினால் வாகனங்களின் உரிமம் ரத்து.

366

பள்ளி வாகனங்களை இதர பயன்பாடுகளுக்கு இயக்கினால் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். Vehicle license revoked if school vehicles are operated for other uses.

Vehicle license revokedபெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பயன்பாடுகளைத் தவிர, பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Vehicle license revoked

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளி வாகனங்கள் அனைத்தும் மத்திய அரசின் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ், அந்தந்த பள்ளியின் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கல்வி சம்மந்தமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் உரிய உத்தரவின்றி, வேறு காரணங்களுக்காக பள்ளி வாகனங்களைப் பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயலாகும். அந்தந்த பள்ளியின் கல்வி சம்மந்தமான பணிகளைத் தவிர, பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வாகனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

மேலும், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு மீண்டும் பள்ளி வாகன அனுமதி வழங்கப்பட மாட்டாது. உரிய அனுமதிச் சீட்டு பெறாத வாகனங்களை, ஒப்பந்த வாகனமாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். அதுபோன்ற வாகனத்தை ஓட்டும் ஓட்டுநா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். கவனக்குறைவாக வாகனம் இயக்கும் ஓட்டுநா்களின் ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்படும்.

keywords: Perambalur News, Perambalur District News, பெரம்பலூர் செய்திகள், பெரம்பலூர் மாவட்ட செய்திகள், Vehicle license revoked.




%d bloggers like this: