வரகு அரிசியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோமா?
வரகு அரிசியின் நன்மைகள் என்ன? What is the benefits of varagu rice?
இது ஒரு சிறுதானிய வகையை சார்ந்ததாகும். இந்த வரகு அரிசியானது பழங்காலத்தில் முக்கிய உணவு தானியமாக இருந்தது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சமீப காலங்களில் பிரபலாமாகி வரும் பாரம்பரிய அரிசி வகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சத்தான தானியமானது பல நூற்றாண்டுகளாக இந்திய உணவுகளில் பிரதானமாக இருந்து வந்துள்ளது. இப்போது உலகெங்கிலும் உள்ள மக்களின் உணவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெற ஆரம்பித்துள்ளது. இந்த பதிவில் வரகு அரிசியின் பல்வேறு நன்மைகள் மற்றும் அதை ஏன் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்து (Nutrients in Varagu rice)
வரகு அரிசியானது நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ள தானியமாகும். இதில் தியாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. அவை நமது உடலுக்கு தேவையான ஆற்றலை உண்டாக்குகிறது. மேலும் இதில் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால் நமது உடம்பில் உள்ள எலும்புகளை வலுவாக்கவும் கூடுதலாக இரத்த சோகையைத் தடுக்கவும் செய்கிறது.
உடல் எடையைப் பராமரிக்க. (Varagu arisi)
இன்றைய உணவு பழக்கங்களால் பலர் உடல் பருமணால் அவதிப் படுகின்றார். தங்களது உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் முயற்சி செய்கிறார்கள். அந்த நபர்களுக்கு இந்த வரகு அரிசி உணவுடன் கூடிய மருந்து என்றே சொல்லலாம். இதிலுள்ள அதிக நார்ச்சத்துக் காரணமாகப் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைச் சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- வரகு அரிசியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
- வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது இது குறைந்த கிளைசெமிக் கொண்டுள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- வரகு அரிசியில் மாவுச்சத்து உள்ளது. இதனால் தேவையற்ற கொழுப்பை குறைத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம். Varagu Rice is good for a healthy heart
ஆரோக்கியமான வாழ்விற்கு இதயத்தை பராமரிப்பது முக்கியமாக இருக்கின்றது. இந்த இதய ஆரோக்கியத்திற்கு வரகு அரிசி பல வழிகளில் உதவி செய்கிறது. இதில் கொலஸ்ட்ரால் இல்லாததால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வரகு அரிசியில் உள்ள பைட்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
சிறுநீரகம் (Kidney)
வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கின்றது. மேலும் சிறுநீரின் மூலமாகவே உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றச் செய்கிறது. அதே போல் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்கவும் அதன் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
வரகு அரிசியை வடித்து சாதமாகவோ, கஞ்சி போன்றோ அல்லது திண்பண்டமாகவோ சாப்பிடலாம்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Varagu benefits, Health tips in Tamil, Varagu benefits in Tamil, What is the benefits of varagu rice?