Delicious Varagu Adai

சிறுதானிய வரகு அடை செய்வது எப்படி?

214

வரகு அடை சுவையாக செய்வது எப்படி?

Delicious Varagu Adai

எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக சிறுதானியத்தில் (Varagu Adai) அடை செய்து சாப்பிட ஆசை அதில் முதலில் வரகு அடை செய்ய ஆசைப்பட்டு முயற்சி செய்தேன் நன்றாக வந்தது. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வரசு அடை எப்படி செய்யலாம் என்பதை செய்முறை விளக்கத்துடன் இந்த பதிவில் விளக்கியுள்ளேன். தவறாமல் முழுவதும் படித்து நீங்களும் செய்து பாருங்கள். மற்றவர்களும் இதை பகிருங்கள்.

வாங்குங்கள் Amazon ல் உங்களுக்கு தேவையானது.

அரிசியில் மட்டும்தான் அடை செய்யனுமா என்ன?

பாரம்பரியமாக நமது மூதாதையர்கள் பயன்படுத்திய வரகரிசியை நாம்  ஓரங்கட்டிவிட்டோம். அதிலுள்ள பயனை  தெரிந்துக்கொண்டு மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளோம்.

அதையும் புதுமாதிரியாக ருசியாக உண்பதற்காக வரகரிசியில் அடை செய்ய முயற்சிப்போம் வாருங்கள்.

வரகில் பல பதார்த்தங்கள் செய்யலாம். நாம் செய்யபோவது வரகு அடை.

தேவையான பொருட்கள்:

ஒரு கப் வரகு,

கால் கப் கடலை பருப்பு

கால் கப் துவரம் பருப்பு

2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு

2 தேக்கரண்டி பாசி பருப்பு

2 தேக்கரண்டி அவல்

6 சிவப்பு மிளகாய்

சிறிது பெருங்காய பொடி

வெங்காயம் ஒன்னு

சிறிதாக வெட்டிய மல்லி இலைகள்

கறிவேப்பிலை ஒரு கொத்து

நறுக்கிய இஞ்சி 2 தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு

வரகு தனியாக எடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு ஊற வைத்து கொள்ளவும். அதேப போல மற்ற பருப்புகளை சுத்தம் செய்து ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.

  • ஊறவைத்த வரகை தண்ணீரில் இருந்து வடிகட்டி சிறிது கரடுமுரடான பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்வும்.
  • பிறகு ஊறவைத்த பருப்புகளைச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • இவை இரண்டையும் நன்றாக கலந்து குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.
  • மீதமுள்ள அனைத்து பொருட்களையும் அதாவது நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும்.
  • தோசைக் கடாயை சூடாக்கி, எண்ணெய் தடவி, சிறிய கெட்டியாக தட்டிய அடையை. மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை புரட்டி புரட்டி போட்டு எடுக்கவும்.

அப்புறம் என்ன சுவையா வரகு அடை ரெடி. இதனுடன் நாட்டு சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Delicious Varagu Adai, varagu arisi adai in tamil, varagu arisi adai, millet adai recipe,




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights