பொதுத் துறையில் காலிப்பணியிடங்கள்

பொதுத் துறையில் காலிப்பணியிடங்கள்:முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

பொதுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய உணவு நிறுவனத்தின் பொதுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளதால், அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் ‌w‌w‌w.‌f​c‌i.‌g‌o‌v.‌i‌n   எனும் இணையதள முகவரியில் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரத்தை இணையதள விண்ணப்பத்துடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏப். 5 ஆம் தேதிக்குள் நேரில் தெரிவித்து பயனடையலாம்.

கல்வி உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம்:

2018- 2019 ஆம் ஆண்டுக்கு, இதுவரை கல்வி உதவித்தொகை பெறாத முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பள்ளிக்கல்வி, இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி, தொழில் சார்ந்த கல்வி மற்றும் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெற, மார்ச் 15 ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவித்தொகை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை 04329- 221011 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply

%d bloggers like this: