ADVERTISEMENT
United Arab Emirates- Union Pledge Day

ஐக்கிய அரபு அமீரகம்: யூனியன் உறுதிமொழி தினம்

United Arab Emirates: Union Pledge Day

ஐக்கிய அரபு அமீரக (UAE) ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ஜூலை 18ம் தேதியை “யூனியன் உறுதிமொழி தினம்” (Union Pledge Day) என அறிவித்துள்ளார். இந்த முக்கியமான நாள், அமீரகத்தின் ஸ்தாபக தந்தை ஷேக் ஜாயித் மற்றும் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் கையெழுத்திட்ட வரலாற்று பிரகடனத்தை நினைவுகூறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

1971ம் ஆண்டு, ஏழு தனித்தனி எமிரேட்டுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) எனும் தேசத்தை உருவாக்கினர். ஜூலை 18, 1971 அன்று நடந்த முக்கிய கூட்டத்தில், துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா உள்ளிட்ட ஏழு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்கள், டிசம்பர் 2, 1971 அன்று ஐக்கிய அரபு அமீரகம் எனும் நாட்டை அதிகாரப்பூர்வமாக நிறுவுவதற்கான யூனியன் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த வரலாற்று நாளை நினைவுகூறும் வகையில், அமீரக ஜனாதிபதி கூறுகையில், “1971 இல் இந்த நாளில், ஷேக் ஜாயித் மற்றும் அவரது சக ஆட்சியாளர்கள், யூனியன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசியலமைப்பின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில், நமது நாட்டின் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் என அறிவித்தனர். டிசம்பர் 2 அன்று நமது தேசத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்த ஒரு வரலாற்று நாள் இதுவாகும்.”

ADVERTISEMENT

“எனவே, இன்று ஜூலை 18 ஐ யூனியன் உறுதிமொழி தினமாக அறிவிக்கிறோம். இது நமது நாட்டின் வரலாற்றைக் கொண்டாடும் ஒரு தேசிய நிகழ்வாகவும், தேசத்தை நிறுவுவதற்கான பயணமாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார். மேலும், இந்த நாள் மறைந்த ஷேக் ஜாயித் மற்றும் பிற ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட தேசிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யூனியன் உறுதிமொழி நாள் என்பது நாட்டின் ஒற்றுமைக்கான பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல் என்று துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவருமான மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் வலியுறுத்தியுள்ளார்.

கொடி நாள், தியாகிகள் நினைவு தினம் ஆகியவற்றிற்கு பிறகு, யூனியன் உறுதிமொழி நாள், ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது தேசிய நிகழ்வாகும். அமீரகத்தின் முதல் யூனியன் உறுதிமொழி நாள் இன்று என்பதாலும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Kewords: Union Pledge Day, Gulf Tamil News, GCC Tamil News, UAE Tamil news, Tamil News UAE, Dubai Tamil News

அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

Our Facebook Page

ALSO READ:

துபாய் விமான நிலையத்தில் ஒரே நாளில் 2.86 லட்சம் பயணிகள்
அபுதாபியில் இந்திய மருத்துவரின் பெயரில் சாலைக்கு பெயர்
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *