UAE-ன் பொது மன்னிப்பு காலத்தில், குறைவான விலையில் மோசடி குடியிருப்பு விசா சலுகைகள் குறித்து எச்சரிக்கை!
UAE’s amnesty program: Beware of scams!
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களும், விசிட் விசாவில் வந்து திரும்ப செல்லாமல் தங்கியிருப்பவர்களும் தங்கள் நிலையை முறைப்படுத்தி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம். மேலும் இதற்காக எந்த அபராதமும் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இத்திட்டத்தின் பின்னணியில் சில மோசடி வேலைகளும் ஆரம்பமாகியுள்ளது தெரிவயந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
சில குடியிருப்பு விசா தொடர்பான மோசடி சலுகைகள் மூலம், மோசடி செய்பவர்கள் வெளிநாட்டினரை குறைந்த விலையில் விசா கொடுப்பதாகக் கூறி ஏமாற்றுகின்றனர். இது சம்மந்தமாக அமீரகத்தின் கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் ஜெபல் அலி மற்றும் சோனாபூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் சில வெளிநாட்டவர்களுடன் பேட்டி கண்டது. அப்போது அவர்களில் சிலர் கூறியதாவது ”தங்களுக்கு 5,000 திர்ஹம்களில் குடியிருப்பு விசா பெற்றுத் தருவதாகச் சிலர் வாக்குறுதி அளித்ததாக” கூறினர். ஆனால் இது குடியிருப்பு விசா செலவுக்கு மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
35 வயதான பாகிஸ்தான் நாட்டவர் தனது அனுபவத்தை பகிர்ந்தபோது, “ஒரு நபர் என்னை அணுகி, 5,000 திர்ஹம்களில் குடியிருப்பு விசா தருவதாக கூறினார். ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என நான் சந்தேகித்தேன். மேலும், அவர் கூறிய நிறுவனம் மற்றும் பணிப்பதவிகள் பற்றிய கூடுதல் தகவல்களை கேட்டபோது, அவர் எதும் சொல்லாமல் சென்றுவிட்டார்” என்று கூறினார்.
சோனாபூரில் வசித்த 39 வயதான இந்தியர் கூறியது சிலர் அவரிடம் குடியிருப்பு விசாவை சரிசெய்ய முயன்றதாக கூறினார். “எனது அபராதம் 70,000 திர்ஹம்களுக்கும் மேல் உள்ளது. கான் என்ற நபர் என்னை இருமுறை அணுகி, Dh8,000 இல் எனது அபராதங்கள் நீக்கி, புதிய குடியிருப்பு விசா கிடைக்கும் என்று கூறினார்,” என்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், தனது விசிட் விசா காலாவதியான பிறகு ஒரு வருடமாக UAE இல் சிக்கித் தவித்துள்ளார். அவரும் சில மோசடி ஆட்கள் 6,000 திர்ஹம்களில் விசா கிடைக்கும் என்று சிலர் கூறியதாக தெரிவித்தார். “ஆனால் அப்படி சொன்னவர்களுக்கு அலுவலகமோ அல்லது முறையான அமைப்போ இல்லை. நான் என் நிலையை சரிசெய்ய முயற்சிப்பதை எப்படியோ தெரிந்து என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர்,” என்று கூறினார்.
குடிவரவு (Immigration) நிபுணர்கள், குடியிருப்பு விசா பெறுவதற்கான உண்மையான செலவு 5,000 திர்ஹம்க்கும் அதிகமாக தொடங்கும் என்று எச்சரிக்கின்றனர். “பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி மோசடி ஆட்கள் அதிக விரக்தியுடன் உள்ள வெளிநாட்டினரை குறைவான விலையை கூறி கவர்கின்றனர்,” என்று செவன் சிட்டி டாக்குமெண்ட் க்ளியரிங் சர்வீசஸின் முகமது தாவூத் ஷாபுதீன் கூறினார்.
இதுமாதிரியான மோசடி பேர்வளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற முகவர்களுடன் அல்லது அரசாங்க அதிகாரிகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
Thanks-Khaleej Times
Keywords: UAE’s amnesty program, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
வளைகுடா செய்திகள்
ஓவர்ஸ்டேவில் தங்கியவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
அமீரகத்தில் பொதுமன்னிப்பு: செப்டம்பர் 1 முதல் அமல்.!