கடல் பாம்பைப் பார்த்தா பீதியாக வேண்டாம்; ஷார்ஜா அரசு எச்சரிக்கை..!
UAE: marine snakes on beaches
ஷார்ஜாவின் கடற்கரையில் கடல் பாம்பு அதிக அளவில் இந்த பருவ நிலையில் காணப்படுகிறது. இவ்வகை பாம்புகள் அமைதியானவை என்றாலும் தமக்கு ஆபத்து என்ற சூழ்நிலையில் மனிதர்களை மோசமாக தாக்கும் இயல்புடையது என்பதாக சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இச்சூழலில் கடல் பாம்பைப் பார்த்து மக்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றும் இவ்வகை பாம்புகளுக்கு தீங்கு இழைக்காமல் கடந்து செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொது இடங்களில் பாம்பு தென்பட்டால் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் தெரிவிக்க பொது மக்கள் இந்த எண்ணில் அழைக்கலாம் +97165047777 அல்லது வாட்ஸ்ஆப் எண்ணான இந்த +971562163939 தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தகவலின் அடிப்படையில் வன விலங்கு நிபுணர்கள் பாம்புகளை அங்கிருந்து அப்புரப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.
marine snakes, marine snakes on beaches
You must log in to post a comment.