UAE: 4 or 5 days off for Eid Al Adha
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதாவிற்கு ஐந்து நாட்கள் விடுமுறையாக இருக்க வாய்ப்பு.
ஹிஜ்ரி நாட்காட்டி மாதமான துல் காய்தாவின் 29வது நாளான ஜூன் 6 அன்று பிறை பார்ப்பதன் மூலம் விடுமுறையின் சரியான நாட்கள் கணிக்கப்படும்.
இது எவ்வாறு செயல்படும் என்பது இங்கே பார்க்கலாம்: ஜூன் 6ல் சந்திரன் தென்பட்டால், துல்ஹஜ் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும். அரஃபா தினம் ஜூன் 15 (துல் ஹஜ் 9) மற்றும் ஈத் அல் அதா ஜூன் 16 (துல்ஹஜ் 10) அன்று இருக்கும். இதன் அடிப்படையில் விடுமுறை ஜூன் 15, சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை இருக்கும். வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு), இது இரண்டு வார நாட்கள் விடுமுறை இருக்கிறது.
அதே நேரத்தில் ஜூன் 6 அன்று பிறை தெரியவில்லை என்றால்: துல்ஹஜ் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும். ஜூன் 16 அன்று அரஃபா தினம், ஜூன் 17 அன்று ஈத் அல் அதா.
விடுமுறை ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 19 புதன்கிழமை வரை இருக்கும். வார இறுதியில் (சனிக்கிழமை, ஜூன் 15) சேர்த்து, இது ஐந்து நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிப்புகள்:
ஜூன் 6 ஆம் தேதி சந்திரனைப் பார்க்க முடியாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர், எனவே மக்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
பலரும் வரும் இந்த ஈத் விடுமுறையை பள்ளி விடுமுறைகளுடன் நீண்ட விடுமுறைக்கு திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் பயணத் தேவை அதிகமாக இருப்பதால் விமானக் கட்டணம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய நாட்கள்:
சந்திரனை பார்த்தல்: ஜூன் 6
சாத்தியமான அரஃபா நாள்: ஜூன் 15 அல்லது 16
சாத்தியமான ஈத் அல் அதா: ஜூன் 16 அல்லது 17
விடுமுறை காலம்: ஜூன் 15-18 (4 நாட்கள்) அல்லது ஜூன் 15-19 (5 நாட்கள்)
பொருத்து இருந்து பார்ப்போம் இந்த ஈத் அல் அதா எத்தனை நாட்கள் விடுமுறை என்று.
இதையும் படிக்கலாம்
பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 220 கார்கள் பறிமுதல்
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
விசிட் விசாவில் கூடுதல் நாள் தங்கினால் அபராதம்