What is traditional rice

Types of the best Rice and it’s Benefits!

138
What is traditional rice

Types of rice and benefits

பாரம்பரிய அரிசி என்பது மரபணு மாற்றங்கள் இல்லாமல் பயிரிடப்பட்டு அறுவடை செய்து நுகரப்படும் அரிசி வகைகளாகும். இவ்வகை அரிசிகள் குறிப்பிட்ட உள்ளூர் தட்பவெப்பநிலைகள், மண் வகைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு தகுந்தார் போல் அவை விளையும் பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. இந்த அரிசிகளனைத்தும் தனித்துவமான சுவைகள் மற்றும் ஊட்டச்சத்து குணம் கொண்டுள்ளன.

பாரம்பரிய அரிசிகளின் சில வகைகள் மற்றும் பயன்கள்: Types of rice and benefits

கருப்பு கவுனி அரிசி (Karuppu Kavuni Rice)

Karuppu Kavuni

Types of rice and benefits
  • கருப்பு கவுனி அரசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, மற்ற வகை அரிசிகளை விட இதில் கூடுதலாக  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • இதில் அந்தோசயினின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
  • அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
  • வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுனி அரிசி ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுனி அரிசியில் செய்த உணவுகளை உண்பதன் மூலம் மிக எளிதாக உடல் எடை குறைவதை காணலாம்.
  • இந்த அரிசி நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதுடன், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்குகிறது. இப்படி ஏகப்பட்ட பலன்கள் இதிலுள்ளது.

கருப்பு கவுனி அரிசியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள…

மாப்பிள்ளை சம்பா (Mappillai Samba Rice)

Mappillai Samba rice

Types of rice and benefits
  • ஆண் தன்மை அதிகரிக்கவும், உடலுக்கு பலம் கொடுக்கும் சத்துகள் இந்த அரிசியில் இருக்கிறது.
  • ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் அதற்கான பலனும் தெரிய வரும்.
  • பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
  • இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
  • இந்த அரிசியை தினசரி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
  • எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி தொற்று உண்டாக கூடும். நம் உணவில் இந்த சேர்ப்பதன் மூலம் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
  • எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.
  • அதோடல்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது.
  • இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

சிவப்பு கவுனி (Sivappu Kavuni Rice)

benefits of red rice

Types of rice and benefits
  • இதில் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது. புரதச்சத்து நிறைந்த இந்த  அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கவும் உதவுகிறது.
  • காலை உணவாக இந்த அரிசியினால் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுது முழுவதும் நமது உடல் மிகுந்த உற்சாகமாக இருக்கும்.
  • சிகப்பு அரிசியில் புட்டு, கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
  • சிகப்பு அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும்.
  • இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும் குணம் கொண்டது.
  • எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
  • குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
  • தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

சிவப்பு அரிசியை விவரமாக தெரிந்து கொள்ள.

கருங்குருவை அரிசி (Karungkuruvai)

Karunguruvai Arisi
Types of rice and benefits
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரிசி பெரிதும் உதவியாக இருக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.
  • வயது முதிர்வை தடுத்து, சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
  • பித்தத்தை சரி செய்யவும் இந்த அரிசி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
  • சித்த மருத்துவத்தில் முதன்மையான மருந்தாக இந்த கருங்குறுவை அரிசி பயன்படுகிறது.
  • அதே போல யானைக்கால் நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க இந்த அரிசி உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்குருவை அரிசியைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள..

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Types of rice and benefits

Buy your favorite Books Online




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights