இன்று இரவு 7 மணியிலிருந்து இரு சக்கர வாகனப் பேரணிக்கு தடை. Two-wheeler rally banned.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, இன்று (சனிக்கிழமை – ஏப். 3) 72 மணி நேரத்துக்கு முன்னதாக பெரம்பலூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி இல்லை என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு இரு சக்கர மோட்டாா் வாகன பேரணி நடத்தி வாக்குச் சேகரிக்க தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று மாலை 7 மணியிலிருந்து ஏப். 7 ஆம் தேதி காலை 7 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி இல்லை.
keywords: Two-wheeler rally banned, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.