டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிர் தப்பினர். Two people survived a car crash with a tractor.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் சோலை.ராமசாமி (வயது 52). பேரூராட்சி முன்னாள் தலைவரான இவர் தற்போது பெரம்பலூரில் வசித்து வருகிறார்.
நேற்று சொந்த வேலை காரணமாக அரும்பாவூருக்கு தனது காரில் சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சக்திவேல் உதவி கேட்டு காரில் ஏறிக் கொண்டார். கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே கார் வந்தபோது பெரம்பலூரில் இருந்து உடும்பியம் நோக்கி கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.
அப்போது காரில் இருந்து உயிர்காக்கும் பலூன் ஏர்பேக் வெளியேறி சோலை.ராமசாமி மற்றும் போலீஸ் ஏட்டு சக்திவேல் ஆகியோரின் உயிரை காப்பாற்றியது. இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் இருவரும் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.