ADVERTISEMENT
Two officers arrested

பெரம்பலூரில் லஞ்சம் பெற்ற இரு அலுவலர்கள் கைது

பெரம்பலூரில் ஆசிரியர் பணி நீட்டிப்புக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் பெற்ற இரு அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Two officers arrested for taking bribe in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆசிரியர் பணி நீட்டிப்புக்காக ரூ. 40,000 லஞ்சம் பெற்ற உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகிலுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (60) என்பவர், பசும்பலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் கடந்த ஜூலை 31-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் ஒரு ஆண்டுக்கான பணி நீட்டிப்பு கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அலுவலர், திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சிவபாலன் (47) ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு உடன்படாத பாலசுப்ரமணியம், பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரின் ஆலோசனையின் பேரில், வெள்ளிக்கிழமை மாலை, பாலசுப்ரமணியம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு சென்று, சிவபாலனின் வழிகாட்டுதலின் பேரில், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளரான ரமேஷிடம் (சிறுகனூரைச் சேர்ந்தவர்) ரூ. 40 ஆயிரத்தை ஒப்படைத்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ராவின் தலைமையில், போலீசார் சிவபாலன் மற்றும் ரமேஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Two officers arrested, Perambalur District News, Perambalur News, Veppanthattai News, Okalur News


Our Facebook Page


இதையும் வாசிக்கலாம்
கஞ்சா கடத்தல்: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *